• மென்தமிழ்
    • மென்தமிழ் பற்றி
    • மென்தமிழ் கொள்கைகள்
    • மென்தமிழ் பயன்பாடுகள்
  • மென்தமிழ் எழுத்துக்கள்
    • அறிமுகம்
    • உயிரெழுத்துக்கள்
    • மெய்யெழுத்துக்கள்
    • ஆயுத எழுத்துக்கள்
    • நினைவில் கொள்ள
    • மென்தமிழ் எண்கள்
  • மென்தமிழ் விதிகள்
    • ஆயுதம் தரிக்கும் வல்லினம்
    • வில் ஏந்தும் இடையினம்
    • வேல் எய்தும் மெல்லினம்
    • மெய் இரண்டாக்கும் வாள்
    • வில் ஏந்தும் உயிர்
    • உயிர் நீட்டும் வாள்
    • வேல் ஏந்தும் உயிர்
    • கேடயம்
    • சொடுக்கிடும் வல்லினம்
    • யுத்த தொனி
    • உயிர் வெட்டுதல்
    • மௌனம்
    • ஆயுத அணிவகுப்பு
    • போர் விதிகள்
  • கணினியில் மென்தமிழ்
    • யூனிகோடில்
    • 8 பிட் எழுத்துருவில்
    • மென்தமிழ் எழுத்துருக்கள்
    • மென்தமிழ் விசைப்பலகை
    • மென்தமிழ் விசையட்டை
    • மின்னணுக் காட்சிகளில்
  • அணுகலில் மென்தமிழ்
    • உரை மற்றும் பேச்சு
    • தமிழ் ப்ரெய்ல்
    • மென்தமிழ் ப்ரெய்ல்
    • தமிழ் ப்ரெய்ல் தட்டச்சு
    • ப்ரெய்ல் தொகுப்பாக்கி
    • தொடுதிரை ப்ரெய்ல்
    • பின்னூட்ட அதிர்வுகள்
    • ப்ரெய்ல் வழிசெலுத்தல்
    • ப்ரெய்ல் கணிப்பப்பொறி
  • கருத்துக்கள்
    • உள்நுழை
    • உரையாடுக

மென்தமிழ் ப்ரெய்ல்

மென்தமிழ் ப்ரெய்ல்

படிப்புகள்: 2424
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

மென்தமிழில் ப்ரெய்ல்:

            எல்லா மொழிகளிலும், ப்ரெய்ல் கிரேடு (Grade) 1, கிரேடு 2 மற்றும் கிரேடு 3 என்று பல்வேறு நிலைகளில் கற்றுத்தரப்படுகிறது. கிரேடு / நிலை 1 என்பது எழுத்துக்கள், எண்கள் மற்றும் பிற குறியீடுகள் கொண்டு எழுதப் பயன்படுகிறது. நிலை 2, 3 ஆகியவை, ப்ரெய்ல் புத்தக அளவைக் குறைப்பதற்காக சொற்சுருக்கம், ஒலிச்சுறுக்கம், விகுதிச்சுறுக்கம் கொண்டு வேகமாக எழுதவும் (அச்சிடவும்), படிக்கவும் பயன்படுகின்றன. தமிழில் நிலை 2 சரியாக வரையறுக்கப்படவில்லை.

            மென்தமிழில் எட்டுப் புள்ளி ப்ரெய்ல் பட்டி (Cell) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆறு புள்ளிகள் மட்டுமே கொண்டும் அச்சிடவும் முடியும். 7, 8 புள்ளிகள் பெரும்பாலும் சுருக்கங்களுக்காகவே பயன்படுகின்றன. மென்தமிழில் எப்படி தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் பிற மொழி எழுத்துக்களையும் ஒலித்திரிபு இல்லாமல் எழுதமுடியுமோ, அப்படியே மென்தமிழ் ப்ரெய்லிலும் பிறமொழி ஓசைகளை எழுதலாம். ஆனால், பிற மொழி எழுத்துக்களை 7, 8 புள்ளிகள் இல்லாமல் எழுதும்போது இரண்டு குறியீடுகள் தேவைப்படும். எனவே மென் தமிழ் ப்ரெய்ல் தமிழ் எழுத்துக்களுக்கே எளிதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்தமிழ் எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதுபோல், மென்தமிழ் ப்ரெய்ல் குறியீடுகள் தமிழ் அல்லது பாரத ப்ரெய்ல் குறியீடுகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. அது மட்டுமல்லாமல், கணினியில் நிரல் எழுதும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்தமிழ் நிலை ஒன்று ப்ரெய்ல் அட்டவணையை கீழே காணலாம்.

மென்தமிழ் ப்ரெய்ல்

சில ப்ரெய்ல் குறியீடுகளுக்கு இரண்டு குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன (சிவப்புக் குறியீடுகள்). இவை நிரல்களில் இயல்பாகப் பயன்படுத்தப்படும். பொதுவாக உரை எழுதப் பயன்படுத்தும்போதும், நிரல்களில் உரைசரங்களிலும் (text strings) இச்சிவப்புக் குறியீடுகளைப் பயன்படுத்த ^ குறியீட்டிற்குப் பின் எழுதவேண்டும்.

^@ = \                        ^^ = ( )                                    ^ = &

ப்ரெய்ல் ஒலி சுருக்கங்களுக்கு 7,8 புள்ளிகளை உபயோகப்படுத்தியும் வார்த்தை சுருக்கங்களுக்கு @ குறியீட்டை உபயோகப்படுத்தியும் எழுதலாம்.

பொதுவான உரை எழுதும்போதும், நிரலில் உரைசரங்களிலும் (text strings), எண்களுக்கு முன் 1246 குறியீடு ₹ ஆவதும், எண்களுக்குப் பின் % ஆவதும் இயல்பாகும். அதேபோல நிரல் அல்லாத பயன்பாடுகளில் அடைப்புக்குறிகளுக்கு ஆரம்பம் மற்றும் முடிவு குறியீடுகளுக்கு ஒரே குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

7, 8 புள்ளிகளுடன் நிலை 2 அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும்.

Top | + | - | reset
Copyright ©

CC0
To the extent possible under law, Edison has waived all copyright and related or neighboring rights to Menthamizh. This work is published from India.

2026 All rights reserved. Custom Design by Youjoomla.com
மென்தமிழ் ப்ரெய்ல்